ப்ரோஸ்டேட் வளர்ச்சி
ப்ரோஸ்டேட் என்றால் என்ன?
ப்ரோஸ்டேட் என்பது ஆண்களின் உடலில் உள்ள சிறுநீர்ப்பையின் கீழ் இருக்கும் ஒரு சுரப்பி. இது ஆணின் விந்து திரவத்திற்கான ஒரு நீரைச் சுரக்கிறது. இது வயது வந்த ஆணின் உடலில் பெருவிரலின் பாதி அளவுள்ளதாகவும், 18ல் இருந்து 24 கிராம் அளவு எடையுள்ளதாகவும் இருக்கும்.
ப்ரோஸ்டேட் வீக்கம் என்றால் என்ன?
ப்ரோஸ்டேட் சுரப்பி 40 வயதிற்குப் பிறகு ஆண்களின் உடலில் வளர்ச்சி அடையத் துவங்கும். அது வளர வளர சிறுநீர்ப் பாதையை நெருக்கத் துவங்கும். ப்ரோஸ்டேட் வளர்ந்து சிறுநீர்ப்பாதையை அடைப்பதைத் தான் நாம் ப்ரோஸ்டேட் வளர்ச்சி என்கிறோம்.
ப்ரோஸ்டேட் வளர்ச்சியின் அறிகுறிகள் யாவை?
ப்ரோஸ்டேட் வளர்ந்து சிறுநீர்ப் பாதையை அடைப்பதனால் பின்வரும் தொந்தரவுகள் ஏற்படும்:
- சிறுநீர் வரும் வேகம் குறையும். மூத்திரம் தூரமாக விழாமல் காலருகிலேயே விழும். அதில் அழுத்தம் இருக்காது
- சிறுநீர் பெய்வதற்குப் போனால் உடனடியாக வரமால் சிறிது தாமதமாக வரும்.
- சிறுநீர் நின்று நின்று வரும்
- சிறுநீர் அவசரமாக வரும்
- அடிக்கடி சிறுநீர் வரும். குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டி வரும்.
ப்ரோஸ்டேட் வளர்ந்தால் செய்ய வேண்டியது என்ன?
- ஸ்கேன் பரிசோதனை மூலம் ப்ரோஸ்டேட் வளர்ச்சியினைக் கண்டறிந்தவுடனேயே மருத்துவமும் செய்ய வேண்டியதில்லை. சிறுநீர் கழிப்பதில் உபாதை இருந்து மேல் குறிப்பிட்ட தொந்தரவுகள் இருந்தால் மட்டுமே மருத்துவம் செய்ய வேண்டும்.
- சிறுநீர் கழிப்பதில் உபாதை இருப்பின் நவீன மருந்துகள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
- சில மருந்துகள் மூலம் ப்ரோஸ்டேட் சுரப்பியின் அளவினையும் சிறிதளவு குறைக்கலாம்.
அறுவைச் சிகிச்சை எப்பொழுது தேவைப்படும்?
- சிறுநீர் கழிப்பதில் உள்ள உபாதைகள் மருந்துகள் மூலம் கட்டுப்படாமல், சராசரி வாழ்க்கையைப் பாதிப்பதாக இருந்தால் அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
- சிறு நீர் சுத்தமாக நின்று போய் குழாய் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்
- சிறுநீர்ப் பையில் கல் ஏற்பட்டாலும் அறுவைச் சிகிச்சை அவசியம் ஆகிறது
அறுவைச் சிகிச்சை எப்படிச் செய்யப்படும்?
- அறுவை சிகிச்சை உள் நோக்கிக் கருவிகளை சிறுநீர்ப் பாதையின் வழியாக உள்ளே செலுத்தி வெளிக்காயம் இல்லாமல் செய்யப்படுகிறது. இதற்கு TURP என்று பெயர்
- ப்ரோஸ்டேட் சுரப்பி மிகப் பெரியாதாவோ அல்லது சிறுநீர்ப் பையின் கல் பெரியதாக இருந்தாலோ வயிற்றைக் கிழித்து அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடலாம்
டி யூ ஆர் பி - அறுவைச் சிகிச்சை எப்படிச் செய்யப்படுகிறது?
- டி யூ ஆர் பி - அறுவைச் சிகிச்சை முதுகில் மறுப்பு ஊசி செலுத்தி இடுப்புக்கு கீழ் மறுக்கச் செய்து செய்யப் படுகிறது.
- அதன் பிறகு உங்கள் சிறுநீர்க் குழாயில் ஒரு பேனா அளவு உள்ள கருவி செலுத்தப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர்ப் பாதையை அடைத்து வளர்ந்துள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி வெட்டி எடுக்கப்படும்
- டி யூ ஆர் பி - அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சிறு நீர்க் குழாய் பொருத்தப்படும். 48ல் இருந்து 72 மணி நேரம் கழித்து இந்தக் குழாய் எடுக்கப்படும். அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக சிறுநீர் கழிக்கலாம்.
- ஒரு சிலருக்கு அறுவைச் சிகிச்சை செய்த பின்னரும் சிறுநீர் கழிக்க முடியாமல் போகலாம். இதற்கு சிறுநீர்ப் பை வேலை செய்யாததோ அல்லது வேறு ஏதாவதோ காரணங்கள் இருக்கலாம்.
மருத்துவமனையில் எத்தனை நாள் இருக்க வேண்டி வரும்?
- மூன்றிலிருந்து நான்கு நாட்கள் இருக்க வேண்டி வரும்
டி யூ ஆர் பி - அறுவைச் சிகிச்சையின் போது எப்படிப்பட்ட எதிர்விளைவுகள் ஏற்படலாம்?
- நவீன மருத்துவ முறைகளால் இந்த அறுவைச் சிகிச்சை பொதுவாக பாதுகாப்பானது.
- எனினும், அதிக வயது, சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, இருதய நோய், ஆஸ்துமா போன்ற காரணிகள் உள்ளவர்களுக்கு அவர்கள் வயது காரணமாகவும், பிற நோய்கள் காரணமாகவும் பிரச்னைகள் வரலாம்
- சிறு நீரில் இரத்தப் போக்கு ஏற்படலாம். சில சமயங்களில் இது அதிகமாக இருந்தால் இரத்தம் கொடுக்க வேண்டி வரலாம்
- மயக்க மருந்துகளால் அதிசயமாக சிலருக்கு ஆபத்து ஏற்படலாம்
மேலும் விவரங்களுக்கு உங்கள் சிறுநீர் அறுவைச் சிகிச்சை மருத்துவரை அணுகவும்
Benign Hypertrophy of Prostate
What is Prostate:
Prostate is a gland situated below our urinary bladder. It surrounds the proximal part of the Urethra. It secretes certain substances which form part of the semen. This gland is about the size of the phalanx of the thumb and weighs about 18 to 24 grams in an adult.
What is Prostatic Hypertrophy:
The Prostate starts enlarging from the age of 40. As it enlarges it constricts the Urethra which is the passage of urine. The enlarged prostate narrows the urethra. This enlargement with aging causing narrowing of the proximal part of the Urethra and causing difficulty in passing urine is called Prostatic Hypertrophy.
What are the symptoms of Enlarged Prostate:
Enlarged prostate causing obstruction causes following symptoms:
- The speed of passing urine becomes slow. Instead of falling farther the urine falls close to the person passing urine. It lacks pressure
- There is a delay in initiating urination. After reaching the toilet the person has to wait for few seconds for the urination to start.
- The urine flow is not uniformly fast. It stops and starts.
- There is an urgency to pass urine
- There is increased frequency of urination. Classically the patients with enlarged prostate get up more than once during night to pass urine
What is The Treatment of Enlarged Prostate?
- When the Prostate is found enlarged during routing Ultrasound examination it does not immediately need treatment. Treatment is needed only when the patient has above symptoms.
- Modern medicines can greatly reduce the symptoms of enlarged prostate. Urologist will prescribe drugs for the symptoms of enlarged Prostate
- There are some drugs that can reduce the size of the Prostate. But they should consumed for at least 3 months to show clinical improvement of symptoms
- When the patient’s symptoms do not improve with medical treatment and the symptoms are severe to disturb his routine life surgery can be performed
When is Surgical Treatment Indicated:
- When the symptoms are not improved by medicines and the symptoms are severe enough to disturb routine life.
- When stones are formed in the bladder.
- When the patient cannot void urine at all (RETENTION OF URINE)
How is The Surgery Done?
- The surgery is done by endoscopic method (Minimally invasive method) using specialized instruments. It is called Transurethral Resection of Prostate commonly known as TURP
- Rarely open surgery is required for huge Prostatic enlargement
How is Turp Done?
- TURP done under spinal anaesthesia
- Spinal anaesthesia is a method where an injection is given in your back to deliver anaesthetic medicine near your spinal card.
- This makes your legs and lower abdomen numb
- You can talk and interact with the anaesthetist during the procedure
- You can also mover your arms
- The surgery is totally painless
- For performing TURP a tubular instrument called resectoscope is passed through your urethra
- Through special instruments, using electricity your Prostate is cut into small bits and bits are removed
- At the end of the procedure a catheter is placed in your bladder. It is removed after 48 hours
How Long I Should Stay in The Hospital?
- Usually 3 to 4 days
Whar are the Possible Complications of Undergoing the Procedure?
- The procedure is very safe in the modern clinical practice
- However, the risk is related to old age, diabetes, high blood pressure, heart disease, asthma, brain disease or other illnesses if the patient has
- Sometimes blood may be passed in urine which needs treatment if excessive
- There are rare complications related to anaesthesia
- Some patients fail to pass urine even after surgery. The reason may be that there bladder is not acting or some other reason which needs to be investigated