முட்டை சாப்பிடுங்கள்

முட்டை சாப்பிடுங்கள்

முட்டை சாப்பிடுங்கள்

ஒரே ஒரு செல்லாக இருக்கும் கருவை, ஒரு கோழிக் குஞ்சாக வளர்ப்பதற்கான அனைத்துச் சத்துகளையும் கொண்ட உணவு முட்டை.

விலை குறைவான முழுமையான உணவு முட்டை.

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தில் முட்டை சேர்க்கப்பட்டதற்கான காரணம், அது வளரும் குழந்தைகளுக்கு வேண்டிய இன்றியமையாத பல சத்துக்களைக் கொண்டது என்பது தான்.

முட்டையில் வைட்டமின் A,
வைட்டமின் B5,
வைட்டமின் B12,
வைட்டமின் B2, ,
வைட்டமின் D,
வைட்டமின் E,
வைட்டமின் K,
வைட்டமின் B6 ஆகிய வைட்டமின்களும் மற்றும் கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம், போலிக் ஆசிட் போன்ற உடலுக்கு அவசியமான தாதுக்களும் இருக்கின்றன.

ஒரு முட்டையில் 6 கிராம் புரதமும் 5 கிராம் நல்ல கொழுப்பும் இருக்கின்றன. முட்டையில் உள்ள புரதத்தில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இதில் உள்ள புரதம் உடலால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

முட்டை சாப்பிடுவதால் மாரடைப்பு நோய் வருவது தடுக்கப்படும் என்பது அறிவியலின் வாயிலாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் உள்ள கொழுப்பு உடலில் உள்ள கொழுப்பை அதிகப்படுத்துவது இல்லை. மாறாக குறைக்கிறது என்பதும் அறிவியல் உண்மை. முட்டையில் உள்ள ஒமேகா-3 என்ற அமிலம் கெட்ட கொழுப்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டது. முட்டை சாப்பிடுவதால் உடலில் உள்ள நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது.

முட்டையில் உள்ள லூடின், ஜியா ஜான்த்தின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலுக்கு இன்றியமையாதவை. இவை கண் பார்வைக்கு நன்மை பயப்பவை.

வயது வந்தவர்கள் ஒரு வேளை உணவாக வேகவைத்த அல்லது அவர்களுக்கு பிடித்த வகையில் சமைக்கப்பட்ட நான்கு முட்டைகளை உண்ணலாம். இதனோடு சேர்ந்து காய்கறிகள் மற்றும் கீரைகளை மட்டும் அந்த வேலை உணவாகக் கொள்ளவேண்டும்.

ஒரு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கத் தொடங்கலாம். இரண்டு வயது வரை வெள்ளைக் கருவை மட்டும் கொடுத்து வரலாம். பின்னர் முழு முட்டையை உண்ணலாம்.

முட்டை சந்தேகத்துக்கு இடமின்றி வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் அமுதம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =